Headlines

காரைக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு : கவுன்சிலர்கள்வாக்குவாதம்

காரைக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு : கவுன்சிலர்கள்வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் இன்று சாதாரண, மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சாதாரண கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் இருசக்ர வாகன தினசரி கட்டண வசூல் ஒப்பந்தமும், அவசரக் கூடத்தில் மூன்று சாலை பணிகளின் ஒப்பந்தகளை நிறுத்தி வைக்க கோரி அனைத்து உறுப்பினர்களும் கூட்டம் தொடங்கும் முன்பு பொறுப்பு மேயர், அதிகாரிகளிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்த புள்ளிகளை நிறுத்தி வைப்பதாக பொறுப்பு மேயர் குணசேகரன் அறிவித்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நிறைவேற்றப்படாத பணிகளை விரைந்து முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *