Headlines

கேரள விபத்து, தூக்கி விசப்பட்ட பெண்கள் : பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கேரள விபத்து, தூக்கி விசப்பட்ட பெண்கள் : பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எடப்பாள் மானூர் பகுதியைச் சேர்ந்த சிந்து (48) மற்றும் அவரது மகள் லட்சுமி (26) இருவரும் திருச்சூர் – குட்டிப்புரம் மாநில நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு அருகே இருந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய் மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *