Headlines

அமைச்சர் பதவியை துறப்போம் : காங்கிரஸ் அமைச்சர் சபதம்

அமைச்சர் பதவியை துறப்போம் : காங்கிரஸ் அமைச்சர் சபதம்

2029 ல் பாரத பிரதமர் ராகுல்காந்திதான் அதில் ஏதேனும் மாற்றம் உண்டு என தமிழக வெற்றிக்கழகம் கூறினால் தவெக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை துறப்போம் என குமரி மாவட்டம் வெட்டுமணியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பதவி ஏற்பு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம் ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக மாணிக்கம்தாகூர் பொறுப்பேற்ற நிலையில் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்களை அவர் நியமித்தார் .

அதன்படி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட ஜார்ஜ் ரபின்சன் பதவி ஏற்பு விழா வெட்டுமணி சந்திப்பு பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார் வருகிற 2029 பாராளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி தான் ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால் தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை துறப்போம் என சபதம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *