கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே
கல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவை தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் KNT. சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்பிடித்தனர்

பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஏரியில் இறங்கி மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
ஏரியில் கெண்டை, விரால், ஜிலேபி, உழுவை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
மீன்பிடித் திருவிழாவையொட்டி மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் அப்பகுதியில் அதிகளவில் குவிந்தனர்.
