Headlines

மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் : தஞ்சை தாயின் மகன் கண்ணீர் பேட்டி

மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் : தஞ்சை தாயின் மகன் கண்ணீர் பேட்டி

மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் என நேபாளத்தில் மாயமான தஞ்சாவூர் பெண்மணியின் மகன் கண்ணீருடன் தெரிவித்தார்.

நேபாள நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உள்ள 36 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேரும் உள்ளனர்.

இதேபோல் தஞ்சாவூர் களிமேடு பகுதியை சேர்ந்த அன்பழகி சுற்றுலா சென்றுள்ளார். இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது மகன் அருள்மொழி மற்றும் குடும்பத்தினருடன் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், விபத்து நடைபெறுவதற்கு முன்பு வரை தொடர்பில் இருந்தார். அதற்கு பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை.

இங்கிருந்து சென்ற டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தின் இரண்டாவது மகன் அங்குள்ள மருத்துவமனையில் தேடி வருகின்றார்.

இதுவரை இரண்டு பேருந்துகளுமே கிடைக்கவில்லை, பேருந்துகள் கிடைத்துவிட்டால் அவர்களின் நிலை என்ன என்பது தெரியவரும். 150 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் தேடி வருகின்றனர்.

நாங்கள் மனரீதியாக எல்லாவற்றிற்கும் தயாராகி விட்டோம் என வேதனையோடு அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *