Headlines

தண்ணீர் இல்லாமல் வந்த தீயணைப்பு வாகனம் : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

தண்ணீர் இல்லாமல் வந்த தீயணைப்பு வாகனம் : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனம் போதிய தண்ணீர் இல்லாமல் நிறுத்தப்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

திருப்பத்தூர் மாவட்டம் காவேரிப்பட்டு பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

தேங்காய் பட்டையில் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கயிறு தயாரிக்கும் உதிரி பாகங்களான தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் நார்கள் தீயில் கருகியது.

இதையடுத்து தீயணைப்பு துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது. வந்த தீயணைப்பு வாகனத்தில் போதிய தண்ணீர் இல்லை.
சம்பவ இடத்திற்கு வந்த அரசால் புதிதாக வழங்கப்பட்ட வாகனமாகும்.

பெரிய வாகனம் என்பதால் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று தனியார் நிலங்களில் தண்ணீர் எடுக்க முடியாது என்றும், வாகனத்தை இயக்க முடியாது என்று தண்ணீர் இல்லாமல் நிறுத்தப்பட்டது.
இதனால்
30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார்கள் தீயில் கருகி முழுவதும் சாம்பல் ஆனது.

தீயணைப்பு வாகனம் பெரளவில் மட்டுமே செயல்படுவதாக பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டாக உள்ளது.

சம்பவ இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *