நேபாளில் சிக்கிய 319 பேரில் 219 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 31ந்தேதிக்குள் தமிழகம் வருவார்கள் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லி சென்ற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுன், ராஜ்மோகன், தென்னரசு, வினோத் அடங்கிய குழு சென்றது.
அமைச்சர்கள் குழு டெல்லியில் இருந்து விமானம் மூலம்
நேற்று இரவு சென்னை வந்தனர்.
விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க நோபாளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகள் மேற்கொண்டோம்.
தற்போது அயலக தமிழர் துறை அமைச்சர் தென்னரசு டெல்லியில் தங்கி மீட்பு பணிகளை கண்காணித்து கொண்டிருக்கிறார்.
சட்டமன்றத்தில் விரிவான அறிக்கையை சம்ர்பித்தோம்.
முதலமைச்சர் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. இதையடுத்து அமைச்சர்கள் குழு டெல்லி சென்றது.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டது. சிக்கி தவிக்கும் குடும்பத்தினருக்காக 4 வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்தன. இந்திய வெளியுறவு துறை செயலாளரை நேரில் சந்தித்து ஆலோசித்தோம். இந்தியா- நேபாள் நாடுகள் இணைந்து செய்யும் பணிகள், இந்தியா அரசுடன் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள நடவடிக்கைகளை முடக்கி விட்டோம்.
தமிழ்நாட்டில் இருந்து 319 நபர்கள் பல்வேறு குழுக்கள் மூலமாக நேபாள் சென்றுள்ளனர்.
இதில் 219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வரும் 31ந் தேதி இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள்.
மீதமுள்ள 100 பேர் கண்டுபிடிக்க முடியாமல் மாயமானவர்களாக உள்ளனர். சர்வதேச பேரிடராக உள்ளது. பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கூட உடைமைகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. 2 நாடுகளின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளன. முதற்கட்டமான மீட்கப்ப்ட்ட 21 பேர் டெல்லி வரவழைக்கப்பட்டனர். பின்னர் கும்பகோணம் ஏஜென்சி முலம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இந்த குழுவில் சென்ற 36 பேர் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
மற்றொரு குழுவாக சென்ற 150 பேர் சீனா எல்லை வழியாக காட்மாண்டூ வந்து உள்ளனர். இவர்கள் பல்வேறு விமானங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் 39 பேர் குழுவாக சென்றவர்கள் பத்திரமாக உள்ளனர். இதில் 33 பேர் 31ந் தேதி மாலை கோவைக்கு வந்து சேருகிறார்கள். 6 பேர் சென்னைக்கு வந்து சேருவார்கள்.
மகாதேவி யாத்திராவின் சேர்ந்த 49 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தான் தகவல் தெரியவில்லை.
100 பேர் கண்டறிவதற்கான மீட்பு பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கேற்கிறோம். இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் உள்ளோம். ஹெலிகாப்டர் முலம் மீட்பு பணி, மருத்துவ குழு என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
கேட்பரற்ற சடலங்கள் கிடைத்து உள்ளது. இந்த ச்டலங்கள் யார் என்று கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. முழுமையான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாகவும் சென்று உள்ளனர். மத்திய அரசின் வார் ரூம் முலமாக விரைவாக நடந்து வருகிறது.
கேரளாவில் நடந்த நிலச்சரிவு ஏற்பட்ட பயிற்சி எடுத்தவர்கள் விரைவாக மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அது போல் பயிற்சி எடுத்தவர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டவர்கள் சரியாக இருக்கும்.
இந்த சம்பவத்தில் அனைவரும் ஒன்று இணைந்து தான் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்பது ஒரே நோக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கறினார்.
