சென்னை கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேபாளம் யாத்ரா சென்ற குழு உடன் புதுச்சேரி காமராஜ் நகர் மற்றும் ரெட்டியார் பாளையம் பகுதியை சார்ந்த கீதா , அவரது மகள் வைஷ்ணவி, உறவினர் ஆனந்த சுந்தரி ஆகியோர் சென்று இருந்தனர்.
இயற்கை பெருவெள்ளம் காரணமாக நேபாள மக்கள் மற்றும் இந்தியா தமிழகத்தைச் சார்ந்தவர்களும் இயற்கை பேரிடரில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சார்ந்த 21 பேர் மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரிய சேர்ந்தவர்கள் குறித்தான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி, நேபாள மண் சரிவில் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 3பேரை தேடுகின்ற பணியில் நேபாள அரசு ஈடுபட்டுள்ளது என்றும், நேபாளத்தில் சிக்கி உள்ள 3-பேரின் தகவல்கள் தற்போது வரை கிடைக்கவில்லை,
நேபாள அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறது, புதுச்சேரி அரசு மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும் புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது,நேபாளத்தில் சிக்கி உள்ள 3-பேரின் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
