Headlines

சினிமா பாணியில் சேஸிங்- கடத்தல் லாரியை விரட்டி பிடித்த தாசில்தார் : மதுரையில் பரபரப்பு

சினிமா பாணியில் சேஸிங்- கடத்தல் லாரியை விரட்டி பிடித்த தாசில்தார் : மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியை வாட்டாட்சியர் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்தத்து.

இதையடுத்து இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65 AR 9048 வாகனத்தில் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி மண் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது.

அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறிய நிலையில், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் அதிவேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றார்.

சினிமா பாணியில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயன்றனர்.

அப்போது வாடிப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை அங்கேயே கொட்டி தடயத்தை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றார்.

மேலும், வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் தாசில்தாரிடம் “பார்த்துக்கொள்ளலாம்” என்னை விட்டு விடுங்கள் என மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து சமயநல்லூர் டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக மணல் மற்றும் கனிம வளம் உள்ளிட்டவை திருடப்படுவதாக புகார் வந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது போல் உள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் நேர்மையாக ஆய்வு மேற்கொண்டு கனிம வளத்திருட்டை தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *