Headlines

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது மோசடி புகார் : திமுகவில் பரபரப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது மோசடி புகார் : திமுகவில் பரபரப்பு

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ரூ.2 கோடிக்கு மேல் பணம் வாங்கிகொண்டு மோசடி செய்ததாக அவரின் நெருங்கிய உறவினர் குற்றம்சாட்டி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கட்சி தலைமையிடம் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் நெருங்கிய உறவினரும், திமுக பொதுகுழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான சிவக்குமார் என்பவர் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் மீது புகார் மனுவினை அளித்துள்ளார்.
அதில் பொதுசெயலாளர் துரைமுருகன் தனக்கு பொதுப்பணித்துறையில் ஒப்பந்த பணி தருவதாக ரூ.1.50 கோடியும், எனது மனைவிக்கு ஒன்றிய பெருந்தலைவர் பதவி அளிப்பதாக ரூ.75 லட்சமும் பெற்றுகொண்டார். ஆனால் ஒப்பந்த பணியும் தரவில்லை எனது மனைவிக்கும் ஒன்றிய பெருந்தலைவர் பதவி வாங்கி தரவில்லை.

இதனால் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திமுக தலைமை ஆகியோரிடம் புகார் மனுவை அளித்தார்.

இந்த நிலையில் சிவக்குமாரை கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு சிவகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

வரும் திங்கட் கிழமை திமுக தலைமை அலுவலகத்தில் இதுகுறித்து திமுக தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுகவில் உட்கட்சி பிரச்சனையில் துரைமுருகனை அப்பதவியிலிருந்து தூக்கியடிக்க திமுகவின் முக்கிய தலைவர்களே இது போன்று புகார் அளிக்க வைத்துள்ளதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *