Headlines

வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி: இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத்

வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி: இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத்

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர்
எஸ்சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அப்போது அவர் கூறியதாவது,

ஜிஎஸ்எல்வி மூலம் புவி ஒத்திசைவு நிலைமாற்ற சுற்றுப்பாதையில் புவிசார் கண்காணிப்புச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியிருப்பது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.

இந்த ஏவுதலின்போது தானும் அங்கே இருந்தேன். இஸ்ரோ தலைவர் ஒளிபரப்பில் பேசியபோது இந்தச் செயற்கைக்கோள் தொடர்பான விவரங்களை விளக்கியதை செய்தியாளர்கள் கேட்டிருப்பார்கள்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட மிகக் கனமான செயற்கைக்கோள்களில் இதுவும் ஒன்று.
ஏவுதல் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. செயற்கைக்கோளின் தொடக்கக்கட்ட செயல்பாடுகளும் சிறப்பாக நிறைவடைந்துள்ளன.

வரவிருக்கும் நாட்களில் செயற்கைக்கோள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதித்யா எல்-1 திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,

ஆதித்யா எல்-1 உள்ளிட்ட தற்போதைய இஸ்ரோ திட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்கு தற்போதைய இஸ்ரோ தலைவர்தான் பதிலளிக்க வேண்டும். தான் இதுகுறித்து பதிலளிக்கப் போவதில்லை.

நேபாளத்தில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை கண்காணிப்பதில் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,

இதுபோன்ற தற்போதைய விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கும் தற்போதைய இஸ்ரோ தலைவர்தான் பதிலளிக்க வேண்டும். தான் இதுகுறித்து பதிலளிக்கப் போவதில்லை இவ்வாறு கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *