Headlines

சிவகாசி அருகே கிடா முட்டு சண்டை : ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட கிடாய்கள்

சிவகாசி அருகே கிடா முட்டு சண்டை : ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட கிடாய்கள்

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப கருப்பசாமி, ஸ்ரீ விஸ்வரூப மயான காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதியோடு இன்று கெடா முட்டு சண்டை விமர்சசையாக நடைபெற்றது.

கிடா முட்டு சண்டையில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இருந்து 2 வயது முதல் 5 வயது வரையிலான 65-க்கும் மேற்பட்ட ஜோடி கிடாய்கள் பங்கேற்றன.

வயது வாரியாக கிடாய்கள் மோத விடப்பட்டன. 25 தடவை முட்டுவதை இலக்காக கொண்டு போட்டி நடந்தது. இதில், அதிக முட்டுகள் முட்டி வெற்றி பெற்ற கிடாய்களுக்கு அண்டா, கட்டில், பீரோ, சேர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடந்த கிடா முட்டு சண்டையை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *