பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக ஆப்கன் மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதில் 28 தீவிரவாதிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லை நிலை மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஆப்கானில் உள்ள 10 இடங்களின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு தலிபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி நடத்திய இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் ஆப்கானிஸ்தானின் இந்த பதிலடியை பாகிஸ்தான் தாங்காது என தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.பாகிஸ்தானின் தாக்குதலால் இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
