தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக செப்டம்பர் 24-ல் புகார் பெறப்பட்டது.
உடனே அதுதொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டு மூத்த பெண் காவல் அதிகாரிகள் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளியைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை, சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அரசுப் பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் விசாரணை தொடர்கிறது.
எனவே குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம் என தாம்பரம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
