Headlines

ஏற்காடு மலைப்பாதையில் போலீஸ் வேன் கவிழ்ந்து விபத்து : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய போலீசார்

ஏற்காடு மலைப்பாதையில் போலீஸ் வேன் கவிழ்ந்து விபத்து : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய போலீசார்

சேலம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி தலைமையிலான 15 போலீசார் மற்றும் 3 வனத்துறையினர் ஒன்றாக சேர்ந்து நேற்று அதிகாலை ஏற்காடு மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சபடுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த குழுவினர் காலை 7 மணிக்கு மஞ்சக்குட்டை மலை கிராமங்களில் சோதனை செய்துவிட்டு 8:30 மணி அளவில் குண்டூர் மலை கிராமத்தில் சோதனை செய்வதற்காக சென்றனர்.

அவர்கள் சென்ற வேன் 9 மணி அளவில் குண்டூர் மலைப்பாதையில் உள்ள ஒரு பெரிய வளைவில் சென்ற போது வேனின் பிரேக் பிடிக்காமல் போனது. வேனை ஓட்டி சென்ற ஓட்டுநர் சுதாகர் வேன் அருகில் இருந்த 50 பள்ளத்தில் விழாமல் இருக்க, வலது புறத்தில் இருந்த சுவற்றில் மோதி வேனை நிறுத்த முயற்சித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து வேனை வலது புறத்தில் திரும்பியதில் வேன் வலது புறத்தில் இருந்த சுவற்றில் மோதி இடது புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி மற்றும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வாகனத்தில் இருந்த அனைவருக்கும் லேசான உள் காயங்கள் ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து வேனில் காயம்பட்டு இருந்தவர்களை மீட்டு அந்த சாலையில் வந்த கிராம மக்களுக்கு சொந்தமான சில வாகனங்களில் ஏற்றி ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 108 பணியாளர்கள் அங்கு மீதம் இருந்த போலீசாரை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காயமடைந்த அனைத்து போலீசாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மதுவிலக்கு பிரிவு டி.ஐ.ஜி. மூர்த்தி காயமடைந்தவர்களை நேரில் பார்த்து விசாரித்துவிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதை தொடர்ந்து ஏற்காடு போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *