Headlines

குறுக்கே வந்த பாம்பு : அலறியடித்து ஓடிய சைக்கிளில் சென்ற சிறுவன்

குறுக்கே வந்த பாம்பு : அலறியடித்து ஓடிய சைக்கிளில் சென்ற சிறுவன்

கோவையில் சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து ஓடிய சிறுவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகர் SIHS காலனி இந்திரா நகர் பகுதியில் நேற்று மாலை சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்லும் பொழுது திடீரென பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது.
அதனை சற்றும் எதிர்பாராத சிறுவன் பதற்றமடைந்து சைக்கிளில் இருந்து தாவி குதித்து அலறியடித்து ஓடியுள்ளான்.

சைக்கிளில் முன்புற சக்கரம் பாம்பின் மீது ஏறி இறங்கியது. இருப்பினும் பாம்பு வந்த வழியே வேகமாக சென்றது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அப்பகுதிகளில் சில இடங்களில் புதர்கள் மண்டி கிடப்பதால் அங்கு பாம்பு, அரனை போன்ற விஷமுள்ள ஊர்வனங்கள் அதிகளவு உள்ளது. குறிப்பாக மழை காலங்களில் அவை வெளியேறி வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *