Headlines

உதகை : காத்திருந்த தாய் புலி, தாவி குதித்து சென்ற குட்டி புலிகள்

உதகை : காத்திருந்த தாய் புலி, தாவி குதித்து சென்ற குட்டி புலிகள்

உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் சமீப நாட்களாக இரண்டு குட்டிகளுடன் தாய் புலி ஒன்று அடிக்கடி சாலைகளை கடந்து தண்ணீர் குடிக்க சென்று வருகிறது. புலியை காண சுற்றுலாப் பயணிகள் தனியார் ஜீப்களில் சபாஃரியாக செல்கின்றனர்.

அவர்கள் புலியை கண்டு பார்த்து வரும் நிலையில் இன்றும் தாய் புலி சாலையை கடக்க வந்தது. ஆனால் குட்டிகள் பின் தொடர்ந்து வராததால் தாய் புலி காத்திருந்தது. பின்னர் வனத்திற்குள் சென்றது.அப்போது இரண்டு குட்டிகளும் தாவி குதித்து ஒரே பாய்ச்சலில் தாயிடம் சென்றன.

அடிக்கடி இந்த புலி சாலையை கடந்து செல்வதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிக கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் .

இரண்டு குட்டிகளுடன் தாய் புலி சாலையை கடந்த வீடியோ காட்சிகளை சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *