Headlines

ஸ்ரீவில்லிபுத்தூர் : 10 வது நாளாக தொடரும் நெசவாளர்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : 10 வது நாளாக தொடரும் நெசவாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு மற்றும் நிவாரணம் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் 10 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் 3000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பிரதானமாக பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை நெசவு செய்யப்பட்டு வருகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்டர் உடன் கூறிய புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 6 மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியார்பட்டி தெருவில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டி திறந்தும், பிச்சை எடுத்தும்,சாலை மறியலில் ஈடுபட்டும் கடந்த 10 நாட்களாக நெசவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலையில் தொடர்ந்து போராட்டங்களை நெசவாளர்கள் நடத்திவரும் நிலையில் இந்தப் போராட்டம் குறித்தும் நெசவாளர்களின் கோரிக்கை குறித்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், மற்றும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் நெசவாளர்களிடம் பேச்சுவார்த்தைக்கு கூட வரவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் தமிழக அரசு நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமகிருஷ்ணாபுரத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த அறப்போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசு தலையிட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *