புளியங்குடியில் பட்டபகலில் அரசுப்பள்ளி ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்புதுக்குடி மார்க்கெட் அருகில் கற்பகவீதி தெற்குதெரு முத்துக்குமார்(40) இவர் டிவிஎஸ்
தனியார் பைனான்ஸ் மேலாளராகவும் இவரது மனைவி சுதா(34) என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியை சுதா என்பவர் தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இதன் தனியார் பைனான்ஸ் மேலாளராக உள்ள இவரது கணவர் முத்துக்குமாரும் பணிக்கு சென்றுள்ளார்.
இதன் பின்னர் மாலையில் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இரண்டு கதவுகளும் திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பைனான்ஸ் மேலாளர் முத்துக்குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஜெயின்,கம்மல் உட்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான134- கிராம் தங்கை நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக புளியங்குடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி போலீசார் தடயவியல் துறையினர் உதவியுடன் தடங்களை சேகரித்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20-லட்சம் மதிப்பிலான 134 -கிராம் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
