திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் குறிப்பிட்ட பயணிகள் ரயில் சேவைகள் இன்று முதல் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 10.00 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56004) மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56003) ஆகிய இரு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி, செப்டம்பர் 22, 23, 24, 25, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்த இரு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
