தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயரிழந்தவரின் உடலை யாருக்கும் தெரியாமல் உறவினர்கள் அடக்கம் செய்ய நினைத்த நிலையில், ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த இரசுலாபாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் நந்தீஸ்வரன் (27). விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் குடும்பத்தினரிடம் விநாயகர் சிலை அருகே படுத்து உறங்குவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
காட்பாடி ரயில் நிலையத்திற்கும் லத்தேரி ரயில் நிலையத்திற்கு இடையே இவர் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும் போது மகாராஷ்டிராவில் இருந்து தர்மபுரி வரை செல்லும் கூட்ஸ் ரயில் மோதியதில் உயிரிழந்தார்.
இதனை அறிந்த பெற்றோர்கள் ரயில் தண்டவாதத்தில் சிதைந்து கிடந்த உடலை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்ய வீட்டிற்கு எடுத்து வந்து குளிரூட்டும் பெட்டியில் வாலிபரின் புகைப்படத்தை உடலின் மீது வைத்து அடக்கம் செய்ய நினைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
