Headlines

உடுமலை அருகே மான் இறைச்சி பதுக்கிய 4 பேர் கைது : வனத்துறை நடவடிக்கை

உடுமலை அருகே மான் இறைச்சி பதுக்கிய 4 பேர் கைது : வனத்துறை நடவடிக்கை

உடுமலை அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல்(57). விவசாயி.இவருக்கு சொந்தமான தோட்டம் வலையபாளையம் கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு மான்கறி இருப்பதாக உடுமலை வனத்துறைக்கு போலீசார் மூலமாக தகவல் கிடைத்தது.அதன் பேரில் உடுமலை வனச்சரக அலுவலர் சுரேந்தர் தலைமையில் வனவர் மாதையன்,வனக்க காப்பாளர் கோகுலகண்ணன் கொண்ட குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.

அங்கு சென்று ஆய்வு செய்த போது செந்தில்வேல் தோட்டத்தில் கடமான் இறைச்சி மற்றும் கடமான் கொம்பு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒநாய்களால் கடிக்கப்பட்டு மீதமிருந்த கடமான் இறைச்சியை எடுத்து வந்தது தெரிந்தது.

மேலும் அதை கூறு போட்டு இராவணாபுரத்தை சேர்ந்த விவசாயி நடராஜன்(51) பொள்ளாச்சி ஓரைகலியூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மகேந்திரன்(41),பழனி தாலுகா ரெட்டியாரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன்(59) ராவணாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், ஆகியோருக்கு பகிர்ந்து அளித்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டினார்கள்.அதன்பின் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் செந்தில்வேல்,நடராஜன், மகேந்திரன்,முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து கடமான் கொம்பு,இறைச்சி,அறிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் வனத்துறையினர், உடுமலை ஜே.எம்.எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான
முருகானந்தத்தை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *