கோத்தகிரி அருகே காட்டெருமைகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமைகள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள எஸ்.கைகாட்டி கிராமத்தில் இன்று அதிகாலை நுழைந்த மூன்று ஆண் காட்டெருமைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டதுடன்,
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களையும் ,இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமைகளை தேயிலை தோட்டத்திற்குள் விரட்டினர். இருப்பினும் இரண்டு கார்கள், பைக் ஆகியவை சேதமடைந்தது.
