வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து CNN மீதான தடையை கண்டித்து ABC, CBS, NBC, Fox News உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் டிரம்பின் செய்தி ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தன.
இதையடுத்து, வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ YouTube பக்கத்தில் ‘Trump TV: The Essentials Station’ என்ற 24×7 நேரலை ஒளிபரப்பை திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியுள்ளது.
இந்த சேனல் “24/7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும், நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும், நிர்வாகத்தின் முக்கிய தருணங்கள், அறிவிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில்” என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
