Headlines

டூவிலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து : இரு முதியவர்கள் உயிரிழப்பு

டூவிலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து : இரு முதியவர்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே மேல்வேலத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அருகே மேல் வேலத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (68). ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (71). சிவில் காண்ட்ராக்டர்.

இந்நிலையில் நண்பர்களான இருவரும் மேல்வேலத்தில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது சோளிங்கரில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த லட்சுமணனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை எஸ்.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணனும் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *