குன்னூரில் நடைபெறும் தென்னிந்திய தேயிலை தோட்ட அதிபர் மாநாட்டை துவக்கி வைக்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவை வந்த துணை குடியரசு தலைவரை தமிழக
ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்,
பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அவர் சாலை மார்க்கமா குன்னூர் புறப்பட்டு சென்றார்.
