Headlines

சிவகங்கை இரட்டை கொலை : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தற்காலிக அரசுப்பணி

சிவகங்கை இரட்டை கொலை : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தற்காலிக அரசுப்பணி

சிவகங்கை அருகே நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு தற்காலிக அரசு பணி வழங்கப்பட்டதால் நான்கு நாளாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

சிவகங்கை அருகே பழமலை நகர் அருகே உள்ள கண்மாயில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிவகங்கை காளையார்கோவில் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசாரம் சிறு தடியடி நடத்தி கலைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறந்தவர்களின் குடும்பத்தார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து இறந்த இரு இளைஞர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தற்காலிக அரசு பணி ஆணையினை கோட்டாட்சியர் ஜெபி கிரேஷியா வழங்கினார். இதனை தொடர்ந்து இறந்தவர்களின் உடற்கூறு ஆய்வு நடைபெற்று உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்வதற்காக அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து உறவினர்கள் அளித்த பேட்டியில், இரட்டை கொலை சம்பவம் நடைபெற்று நான்கு நாள் ஆகியும் அமைச்சர்கள் யாரும் இரங்கல் தெரிவிக்காதும், நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *