Headlines

விநாயகர் சிலைகள் கரைப்பு : ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு

விநாயகர் சிலைகள் கரைப்பு : ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு

சென்னை ஈசிஆர் சாலை பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பை முன்னிட்டு
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை 14 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நிலையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று காலை முதல் சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பக்தர்கள் உற்சாகமாக கரைத்தனர்.

பாலவாக்கம் கடலில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட அடையார் மாவட்டத்தில் 81 சிலைகளும்,மவுண்ட்குட்பட்ட மாவட்டத்தில் 52 சிலைகளும்,தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்ட 450 சிலைகளும்,ஆவடி மாநகர ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்ட 40 சிலைகள் என 623 சிலைகள் கரைக்கப்பட்டன.

பாலவாக்கம் கடற்கரை பகுதியில் விநாயகர் சிலை கரைப்பை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பாலவாக்கம் கடற்கரை பகுதியில் 2 டிராலி மற்றும் 2 கிரேன் வசதி ஏற்படுத்தி வாகனங்களில் இருந்து சிலைகளை இறக்கி கடலுக்குள் கொண்டு சென்றனர்.

கடலுக்குள் செல்ல பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடுப்புகள், உயர் கோபுரம் அமைக்கப்பட்டது, டிரோன் மூலமும், சிசிடிவி கேமரா பொருத்தியும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

அதிக எடையுடைய விநாயகர் சிலையை கிரேன் மூலம் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

அதேபோல் வீட்டில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தங்களது கைகளாலே பாலவாக்கம் கடலில் கரைத்தனர்.

பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பிற்காக என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆணையர் அமல்ராஜ் கேட்டறிந்தார்.
மேலும் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *