உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, பிசியோதெரபியின் முக்கியத்துவம், பக்கவாதம் மற்றும் இருதய–இரத்த நாள நோய்களைத் தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “Physiothon 2026 – World Physiotherapy Day Awareness & Delta Free Cancer Zone Rally” என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது.
டெல்டா கேன்சர் ஃபவுண்டேஷன் மற்றும் இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்ஸ், திருச்சி கிளை சார்பில் நடைபெற்ற இந்த பேரணி, திருச்சி ஸ்டூடன்ட்ஸ் ரோட்டில் தொடங்கியது.
பேரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், குழந்தைகள், பிசியோதெரபிஸ்ட்கள், மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் உடற்பயிற்சியின் அவசியம், உடல் இயக்கத்தின் முக்கியத்துவம், பிசியோதெரபி சிகிச்சையின் பயன்கள் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்தியன் பிசியோதெரபிஸ்ட் அசோசியேஷன் திருச்சி கிளை தலைவர் பாலச்சந்தர் கூறுகையில்… பக்கவாதம் மற்றும் ரத்தநாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றையதினம் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது
உலகம் முழுவதும் 20 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் ரத்த நாளம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 80 சதவீதம் பேருக்கு தடுக்கக்கூடிய வகையில் உள்ளது, இதற்கு முக்கிய காரணியாக உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை தொடர்ந்து கடைபிடித்தால் 80 சதவீதம் பேரும் மீளலாம்.
மற்ற நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரும் இந்த பக்கவாதம்நோய் 44 வயதுட்பட்டவருக்கு வருவதாக ஒரு எச்சரிக்கையிணை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல் மூன்றில் ஒருவருக்கு 40 வயதில் பட்டோருக்கு பக்கவாதம் ஏற்படுவதாகவும் பிசியோதெரபி மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சிகரமான தெரிவித்துள்ளனர்
இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகத்தான் இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காத்து பக்கவாதம் மற்றும் ரத்தநாளம் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
