Headlines

மதுபோதை தகராறில் கொலை : பக்கத்து வீட்டுக்காரர் கைது

மதுபோதை தகராறில் கொலை : பக்கத்து வீட்டுக்காரர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கொல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (35) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன் உள்ள நிலையில் இவர் ஆற்காடு பகுதியில் மர கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ஆற்காடு அடுத்த செய்யாறு கூட்ரோடு அருகே செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் பகுதியில் பகுதியில் ரவி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் (36) ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்தும் போது இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷ் அருகாமையில் பஞ்சர் கடையிலிருந்த இரும்பு ராடு ஒன்றை எடுத்து ரவியின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் ரவி ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு நகர போலீசார் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரும்புராடல் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *