Headlines

இந்து – முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றிய ஊர் கந்தூரி விழா

இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றிய ஊர் கந்தூரி விழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ரெகுநாதபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள பள்ளிவாசலில் ஆண்டுதோறும் பிரான்மலை ஷேக் அப்துல்லா அவுல்யகல் தர்காவை வேண்டி மழை பெய்யவும் விவசாயம் செழிக்கவும் கிடாவெட்டி பிரார்த்தனை செய்து கந்தூரி கொடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் சுமார் 350 கிலோ கிடாக்கறி சமைக்கப்பட்டு அதனை ஊரில் உள்ள அனைத்து இந்து மற்றும் இஸ்லாமிய குடும்பங்களுக்கும் சரியாகப் பிரித்து வழங்கப்பட்டு கந்தூரி விழா விருந்து உபசரிக்கப்பட்டது.

இவ்விழாவில் உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *