Headlines

த.வெ.க ஆட்சியின் மூலதனம் என்பது ரீல்ஸ்.. ரீல்ஸ்.. தான்-இ.பி.எஸ்

த.வெ.க ஆட்சியின் மூலதனம் என்பது ரீல்ஸ்.. ரீல்ஸ்.. தான்-இ.பி.எஸ்

சேலத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

தம்பி ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவில் இருந்தார்; அடுத்தது விசிகவிற்கு சென்றார்.

அதற்கு பிறகு என்னை சந்தித்து அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார் தம்பி, அதிமுக கட்சியில் பதவி விற்பது கிடையாது; உழைப்பவர்களுக்குதான் பதவி கிடைக்கும் என்று சொன்னேன்.

அதற்கு பிறகு தவெகவிற்கு சென்று அந்த கட்சியை குத்தகைக்கு எடுத்துவிட்டார்.

கரூர் சம்பவத்தின்போது தவெக கட்சி அலுவலகத்தை 15 நாட்கள் மூடிவிட்டார்கள்; எல்லோரும் ஓடிவிட்டார்கள்.

வீர வசனம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வெளிமாநிலத்திற்கு சென்று தங்கிவிட்டார்; அப்படியாக வீரமிக்கவர்கள்தான் தவெகவில் இருக்கிறார்கள்.

ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள்.
பிறந்த குழந்தையை கூட ஏமாற்றும் அளவுக்கு ஆகிவிட்டார்கள்.

இந்த த.வெ.க ஆட்சியின் மூலதனம் என்பது ரீல்ஸ்.. ரீல்ஸ்.. தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *