Headlines

சட்டவிரோத பாரில் தகராறு : இளைஞர் அடித்துக்கொலை

சட்டவிரோத பாரில் தகராறு : இளைஞர் அடித்துக்கொலை

கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகே கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் பெட்டிக்கடை வைத்து அனுமதி இன்றி பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் தனியார் வேளாண் நிறுவனத்தில் பணியாற்றும் ஊட்டியை சேர்ந்த அருண்குமார்,அவரது நண்பர்கள் தீபன்ராஜ், மதன், இன்ப சேகரன், பாரதிராஜா ஆகியோர் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் நடத்தும் அனுமதி இல்லாத பாரில் மதுபானம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூல் செய்து உள்ளனர்.

மது அருந்திய அருண்குமார் காலி பாட்டிலை திருப்பி தந்து விட்டு பணம் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு கோவிந்தராஜ் அவரது மகன் கார்த்திக் டாஸ்மார்க் கடை மூடிவிட்டது என தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதில் கார்த்திக் மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ், அருண்குமார் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி உள்ளனர்.

பின்னர் கார்த்திக் கல்லால் அருண்குமாரை தாக்கி உள்ளார். அதில் தலையில் படுகாயம் அடைந்த அருண்குமார் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

தகவல் அறிந்து சென்ற தாலுக்கா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் அவரது தந்தை கோவிந்தராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பாரில் மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *