Headlines

பள்ளி பேருந்து – லாரி மோதல் : மாணவர்கள் காயம், பொதுமக்கள் சாலைமறியல்

பள்ளி பேருந்து - லாரி மோதல் : மாணவர்கள் காயம், பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் மாணவர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் வடபுதுபட்டு பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுகாலையில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் இதனால் இரண்டு கிலோமீட்டர் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷயா அணில் வாக்ரே தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தை கலைத்தார்.
பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த மூன்று மணி நேரம் சாலை மறியல் சம்பவம் பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.

மேலும் இந்த விபத்தில் பள்ளிபேருந்தில் பயணம் செய்த சில மாணவர்கள் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர்.

இதேபோல் வேலூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் டாட்டா ஏஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது வேலூர் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அன்பூண்டி அருகே வந்தபோது, தூக்க கலக்கத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் டாடா ஏஸ் வாகனம் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தின் முன்புறம் முற்றிலும் சேதமடைந்து டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *