Headlines

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு : திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு : திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றி கட்சி அலுவலகம் நடத்திய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் திமுக செயலாளர் ராம் குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

கோயில் நிலத்தை தனது பெயருக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தில் திமுக கட்சி அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார். இவரின் மனைவி வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இதுகுறித்த தகவல்கள் கிடைத்ததும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆலோசனைப்படி கோவில் இணைய ஆணையர் சிவராம் குமார் மூலமாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு அந்த திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இணை ஆணையர் மூலம் அந்த இடத்தில் எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என சார் பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. விரைவில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *