Headlines

மம்தா பானர்ஜியின் கட்சிக்கு புதிய பெயர், புதிய சின்னம்

மம்தா பானர்ஜியின் கட்சிக்கு புதிய பெயர், புதிய சின்னம்

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது.

மம்தா தலைமையில் ஒரு அணியும்,அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் ஒரு அணியும் உருவாகி
தாங்கள் தான் திரிணாமுல் காங்கிரஸ் என உரிமை கோரின.

இந்நிலையில் பிளவுபட்டுள்ள திரிணாமுல் காங்கிரசில் மம்தா பானர்ஜி பிரிவுக்கு ‘கால்பந்து வீரர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என மம்தா தரப்பு கட்சிக்கு புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு புதிய பெயரை ஆணையம் அங்கீகரித்துள்ளது.

ரிதப்ரதா பிரிவு திரிணமூல் காங்கிரஸுக்கு ‘கடித உறை’ சின்னம் ஒதுக்கீடு.

மம்தா தரப்பும் ரிதப்ரதா தரப்பும் உரிமை கோரிய நிலையில் இரு அணிகளின் மனுவை விசாரித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெயர் மற்றும் அதன் இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *