Headlines

கூண்டில் சிக்கிய கரடி : கிராம மக்கள் நிம்மதி

கூண்டில் சிக்கிய கரடி : கிராம மக்கள் நிம்மதி

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமமான‌ அனவன்குடியிருப்பு பகுதியில் ஏராளமான கரடிகள் சுற்றி தெரிகின்றன. இவை அவ்வபோது அப்பகுதியினரை விரட்டி வந்த நிலையில், சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்ற கொத்தனாரை பின்னால் இருந்து கரடி தாக்கியது.

தொடர்ந்து பாபநாசம் வனத்துறையினர் சார்பாக அங்கு‌ சுற்றி திரியும் கரடிகளை பிடிக்க இரண்டு கூண்டுகள் வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு ஒரு கூண்டில் கரடி ஒன்று சிக்கியது.தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவ குழுவினர் கரடியை கூண்டோடு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதியில் விடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி்மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *