Headlines

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு

தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை, 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கக் கோரி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும் நீர்வரத்து கடுமையாக குறைந்துள்ளதால், கூடுதல் நீரை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழக அரசு 9000 கன அடி நீரை 22000 கன அடி நீர் அதிகரித்து திறக்க கோரிய நிலையில் 15 நாட்களுக்கு 6000 கன அடி வழங்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *