மதுபாட்டில்களை பொது இடங்கள், விவசாய நிலங்களில் வீசுவதை தவிர்க்க டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து காலி மதுபாட்டிலை திரும்ப தரும்போது அந்த 10 ரூபாயை வழங்கும் திட்டம் கடந்த திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூல் செய்த தொகையிலும் கமிஷன் அடிக்கும் டாஸ்மாக் ஊழியர்களின் நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மதுபான கடையில் மது வாங்கிய மது பிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு காலி மது பாட்டிலை மீண்டும் கடையில் திரும்ப கொடுக்கும் பொழுது, பத்து ரூபாய் கொடுக்காமல் ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார்கள்.
அதனை அவர் வீடியோவாக பதிவு செய்து ஏன் ஐந்து ரூபாய் கொடுக்கிறீர்கள், பத்து ரூபாய் கொடுக்க வேண்டுமே என்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகில் மது வாங்க வந்தவர்களிடம் எவ்வளவு கொடுத்தார்கள் என்று கேட்க, அவர்களும் ஐந்து ரூபாய் தான் கொடுக்கிறார்கள் என்று சொல்ல அனைத்தையும் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதாக கூறி பாட்டுப் பாடி வாக்கு சேகரித்து ஆட்சியில் அமர்ந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் தற்போதும் அதிகாரிகள் பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் போது பத்து ரூபாய்க்கு பதில் ஐந்து ரூபாய் மட்டும் தருவது மது பிரியர்கள் மத்தியில் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
