Headlines

காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்-அமைச்சர் அருண்ராஜ்

காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்-அமைச்சர் அருண்ராஜ்

சென்னையில்ல செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது,
தமிழகத்தில் தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது; பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.
பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது; இந்த ஆண்டில் இதுவரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்ச லால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *