Headlines

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலை மறியல் : அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலை மறியல் : அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 90 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ள நிலையில் இதுவரை 66 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நன்னிலம் அருகே வெள்ளை அதம்பாவூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் மாலை நேரங்களில் பெய்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து கடகம்பாடி பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த இடத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *