Headlines

ரூ.3,383 கோடி சொத்து: மும்பை வீதியில் பிச்சையெடுத்த பாஜக எம்.எல்.ஏ

ரூ.3,383 கோடி சொத்து: மும்பை வீதியில் பிச்சையெடுத்த பாஜக எம்.எல்.ஏ

மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் செல்வாக்குமிக்க சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவைச் சேர்ந்த பராக் ஷா, அண்மையில் தனது பாதுகாப்புப் படையினர், கார்கள் மற்றும் விலையுயர்ந்த உடைமைகளைத் தவிர்த்துவிட்டு, பிச்சைக்காரர் வேடம் பூண்டு மும்பையின் காட்கோபர் வீதிகளில் ஒரு நாள் முழுவதும் பிச்சை எடுத்துப் பொழுதைக் கழித்தார்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான பராக் ஷாவிற்கு
3,383 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
ஜெயின் மதத்தை சேர்ந்த இவர்,மதத்தின் புனிதகால வழிபாட்டின் போது, இவரது ஆன்மிக குருவான நம்ரமுனி அறிவுறுத்தலின்படி, தன் ஆடம்பர சொத்துக்கள் மற்றும் வசதிகளை தற்காலிகமாக துறந்து, வீதிகளில் பிச்சைக்காரர் வேடத்தில் ஒரு நாள் முழுதும் வாழ்ந்தார். இதற்காக பராக் ஷா, முகத்தில் ஒப்பனை செய்து கொண்டு கிழிந்த ஆடைகளுடன் காட்கோபர் வீதிகளில் அமர்ந்து பிச்சை எடுத்தார்.

இந்த அனுபவம் தனக்கு வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்த்தியதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *