தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 40 தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மினி பஸ்களில் பயணிகள் கடந்த சில வாரங்களாக அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட ரூ., 3ல் இருந்து ரூ. 5வரை அதிகளவு கட்டணத்தை கூட்டி வசூல் செய்து வருகின்றனர்.
திடீர் கட்டண உயர்வு இருந்தாலும் பயணிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் கட்டண தொகைக்கான டிக்கெட் தான் வழங்கி வருகின்றனர்.
உதாரணமாக 12 ரூபாய் வசூல் செய்து விட்டு 10ரூபாய்க்கான டிக்கெட் தான் வழங்கி வருகின்றனர். வசூல் செய்யும் தொகையும் டிக்கெட் ஒரு தொகையும் வேறு வேறாக இருந்து வருகிறது.
இது குறித்து பயணிகள் தனியார் மினி பஸ் ஊழியர்களிடம் கேட்டால், போய் எங்க ஓனரிடம் கேளுங்கள், இல்லையென்றால் மினி பஸ்ஸில் ஏறாதீர்கள் என்று அவ மரியாதையாக பேசி வருவதாக குற்றச்சாட்டு வருகிறது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பெயரளவிற்கு கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுக்கின்றனர். அதிகபட்ச கட்டணமே ரூபாய் 11 தான் வசூல் செய்ய வேண்டும் என்பது அரசு விதிமுறை.ஆனால் ரூபாய் 18 வரை வசூல் செய்யும் நிலைமை உள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வு குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
