Headlines

தீயணைப்புத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி : மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு

தீயணைப்புத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி : மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு

கோவில்பட்டியில் தீ தடுப்பு மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை குறித்து தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீயணைப்பு துறை சார்பில் திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் (டி மார்ட்) தீ விபத்து மற்றும் அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தீ விபத்து ஏற்பட்டாலோ, கூட்டம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த செயல்முறை விளக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த அந்த சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையெடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் அங்கிருந்து ஊழியர்கள் அவரை மெதுவாக தூக்கிச் சென்று முதலுதவி அளித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த பெண் சகஜ நிலைக்கு திரும்பினார்.இதனால்சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *