Headlines

கண்டெய்னர் லாரியில் மோதிய கார் : தலைகுப்புற கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி

கண்டெய்னர் லாரியில் மோதிய கார் : தலைகுப்புற கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி

ஆம்பூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். சென்னையில் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காரில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பணி நிமித்தமாக சென்றுள்ளார்.

காரை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோபிநாத் என்பவர் ஓட்டிச் சென்றார். கார் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபொது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியில் உரசியது.

இதில் நிலைதடுமாறிய கார் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்கார் ஓட்டுநர் கோபிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காரில் பயணித்த சதீஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *