Headlines

பிறக்கப்போகுது புரட்டாசி : காரிமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

பிறக்கப்போகுது புரட்டாசி : காரிமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஆட்டுச் சந்தையில், புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.

புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். இதனால் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே கிடா விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையொட்டி காரிமங்கலம் ஆட்டுச் சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர்.

சந்தையில் வெள்ளாடு, செம்மறியாடு, குறும்பாடு மற்றும் கிடா ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க போட்டி நிலவியதால் விலையும் உயர்ந்தது.

வழக்கமாக ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஆடுகள், தற்போது ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது.

விலை உயர்வால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றைய சந்தையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *