Headlines

கொன்று தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட சடலம் : 15 நாட்களுக்கு பின் மீட்டு போலீசார் விசாரணை

கொன்று தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட சடலம் : 15 நாட்களுக்கு பின் மீட்டு போலீசார் விசாரணை

செம்பட்டி அருகே, சீவல்சரகு கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியை காரில் கடத்தி கொலை செய்து திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் உடல் வீசப்பட்ட நிலையில், 15 நாட்களுக்கு பிறகு உடலை கண்டுபிடித்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சீவல்சரகு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (38) கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் உறவினர் வீட்டில் இருந்து கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாலை, இதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர்கள் 4 பேருடன் சீவல்சரகு அருகே தனியார் பிளாட்டில் மது அருந்துள்ளனர். பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு சங்கிலி முருகனை ஒரு காரில் ஏற்றி மதுரை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களாகசங்கிலி முருகனை காணவில்லை என, அவரது தம்பி முத்துப்பாண்டி (33) செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

செம்பட்டி காவல்துறையினரும் கடந்த 10-ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, சங்கிலி முருகனையும், அவரை கடத்திய நபர்களையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை சங்கிலி முருகனை கடத்திய நபர்கள், சீவல்சரகு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, சங்கிலி முருகனின் தம்பி முத்துப்பாண்டி அவர்களை மடக்கி வைத்துக் கொண்டு, செம்பட்டி காவல்துறையினுக்கு கொடுத்த தகவலின் பெயரில், விரைந்து சென்ற காவல்துறையினர் சங்கிலி முருகனை கடத்திய நான்கு பேரிடம் செம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரில் கடத்தப்பட்ட சங்கிலி முருகனை காரில் செல்லும் போது கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொலை செய்து, அவரை திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டினம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட உச்சப்பட்டி என்ற இடத்தில், பயன்பாடு இல்லாத தண்ணீர் தொட்டியில் உடலை வீசி உள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற, செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் துறையினர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட கட்டிடத் தொழிலாளி சங்கிலி முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். கொலை செய்யப்பட்டு 15 தினங்களுக்கு பிறகு சங்கிலிமுருகனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் தலைமையில் காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *