மயிலாடுதுறை மாவட்டம் அருகே வங்கக் கடலில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் விண்ணப்பத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கி.மீ. பரப்பளவில் எண்ணெய் வயல் அமைந்துள்ள நிலையில் அதே பகுதியில் மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பத்துள்ளது.
இந்த திட்டம் கடந்த 1997-ல் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. பின்நாளில் ஜாயின்ட் அண்ட் சேர் முறையில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு எண்ணெய் எடுத்தல் நிறுத்தப்பட்டது. பின்னர் 2025-ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இப்போது அதை விரிவுப்படுத்துவதற்காக 81 கி.மீ பரப்பளவில் 5 புதிய எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்காக ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் அனுமதி கோரி கடந்த மாதம் விண்ணப்பித்து உள்ளது.
இதற்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும் பெற வேண்டி உள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் மீன்வளத்தை நம்பி உள்ளனர். மீன்கள் அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மீனவர்களின் வாழ்வாதரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
