Headlines

ஆம்பூர் : விநாயகருக்கு 500 கிலோ சந்தன காப்பு

ஆம்பூர் : விநாயகருக்கு 500 கிலோ சந்தன காப்பு

ஆம்பூரில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் பிரதிஷ்டை செய்யப்பட்ட
ஒன்பது அடி உயரமுள்ள விநாயகர் சிலைக்கு 500
கிலோ சந்தன காப்பு அலங்காரம், சிறப்புபூஜை செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவில் 9 அடி உயரமுள்ள வீர விக்னேஸ்வரர் விநாயகர் சிலைக்கு 500 கிலோ சந்தன காப்பு அலங்காரம் செய்து, கலச பூஜை, யாக பூஜை செய்து விநாயகர் சிலைக்கு பிரதிஷ்டை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர்
தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

வீர விக்னேஸ்வரர் விநாயகர் சிலைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள்,பழங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *