Headlines

கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளி கைது : 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளி கைது : 2 கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் அருகே
சட்ட விரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நொச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரை பாபு தலைமையில் மதுவிலக்கு போலீசார் முகமது ரபி, நாகேந்திரன் மற்றும் குமாரசாமி ஆகியோர் நொச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் சந்தேகத்திற்கு கிடமான வகையில் நின்று கொண்டு இருந்ததை அறிந்த போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் 22 என்பதும் அவர் தற்போது திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *